உலகின் தலை சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் தமிழ் பெண்
உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும்
ஈழத்தமிழ் பெண் யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
முதற்கட்டமாக தலைசிறந்த 50 ஆசிரியர்களுள் ஒருவராக திகழ்ந்த யசோதை செல்வக்குமாரன் தற்போது முன்னேற்றத்துடன் தலைசிறந்த 10 ஆசிரியர்கள் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி ஒரு மில்லியன் அமெரிக்க டொடலர் பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது.
அவுஸ்ரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள தொழிநுட்பக் கல்லூரியில் வரலாறு மற்றும் புவியியல் பாடத்திட்டத்தை கற்பிக்கும் யசோதை
அவரது மாணவர்களுக்கு ‘MS Selva’ என இவர் நன்கு அறியப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது.
எட்டு வருட ஆசிரியப்பணியில் இவரின் வெற்றியில் அவுஸ்ரேலிய நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதும் அதேவேளை இவர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி முன்னாள் உப அதிபர் திரு வல்லிபுரம் அவர்களின் பேர்த்தியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.