கரீபியத் தீவுகளில் இளவரசத் தம்பதிகள் ரத்து செய்த சுற்றுலா திட்டப்படி ஞாயிறன்று ஆரம்பித்தது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேம்பிரிஜ் பிரபுக்கள் தம்பதியான வில்லியமும், கேட்டும் இன்று ஞாயிறன்று ஆரம்பிக்கவிருந்த தமது கரீபியத் தீவுகளுக்கான சுற்றுலாவை ரத்து செய்திருந்தனர். அவர்களது வரவை எதிர்த்து அப்பகுதிகளில் பலமா எதிர்ப்பு உருவாகியிருந்ததே அதற்குக் காரணமாகும். எனவே, பெலீஸ், பஹாமாஸ் மற்றும் ஜமேக்காவில் அத்தம்பதிகள் செய்யவிருந்த சுற்றுலாவில் பெரும் தடங்கள் ஏற்பட்டிருக்கிறது.
தம்பதிகள் தமது விமானத்தில் பெலீஸில் இறங்கவிருந்த இடம் ஒரு உதைபந்தாட்ட மைதானம் என்றும் அங்கே அவர்கள் இறங்குவது பற்றி உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றும் தெரிகிறது. “எங்கள் நாட்டை விட்டு வெளியேறு”, “காலனித்துவக்கால ஆக்கிரமிப்பும் சுரண்டலும் தொடர்கிறது,” போன்ற கோஷங்களுடனான கொடிகளைப் பிடித்தபடி படங்கள் எடுத்துச் சமூகவலைத்தளங்களில் உலவ விட்டிருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
அப்பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புக்களால் ஓரிரு மாதங்களில் ஆரம்பிக்கவிருக்கும் மகாராணி எலிசபெத்தின் வைரவிழாக் கொண்டாட்டங்களும் பாதிக்கப்படலாம் என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. தமது சுற்றுலாவின் முக்கிய பகுதியாக அத்தீவுகளில் நடைபெற்றுவரும் படகோட்டப் போட்டியொன்றில் அரசகுடும்பத் தம்பதிகள் பங்குபற்றவிருக்கிறார்கள். பாரம்பரியமாக நடத்தப்படும் அந்தப் போட்டி இச்சமயத்தில் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டத்தைக் கௌரவிக்கும் முகமாக நடத்தப்படவிருக்கிறது.
வெள்ளியன்று ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த அச்சுற்றுலா தம்பதிகள் வேறொரு இடத்தில் இறங்குவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டு ஆரம்பித்தது. முதலில் ஏற்பட்ட தடங்கலுக்குக் காரணம் குறிப்பிட்ட இறக்குமிடம் பற்றிய நிலச்சர்ச்சை அப்பகுதி பழங்குடி இந்தியர்களுக்கும் பெலீஸ் அதிகாரத்துக்கும் இடையே இருந்ததாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்