“குழந்தையுடன் கதைக்க மறக்கக்கூடாது” | ஏன்? எப்படி?
குழந்தை வளர்ப்பில் முக்கியமான ஒரு பகுதிதான் தினமும் குழந்தைகளுடன் கதைத்தல்.
குழந்தையுடன் கதைத்தல் என்பது குறிப்பிட்ட வயது வந்தவுடன் கதைத்தல் என்பது அல்ல.
குழந்தை பிறந்தவுடன் இருந்தே அவர்களுடன் கதைக்க ஆரம்பித்தல் என்பதாகும்.
அதாவது வெறுமனே குழந்தை பால் கொடுத்தால் அவர்களுடைய சிறுநீர் ,மலம் வெளியேற்றம் செய்வது மாத்திரமில்லாம
ல் அவர்களோடு நேரம் ஒதுக்கி கதைத்தால் ஆகும்
.
குழந்தைகளுடன் கதைத்தல் என்ற செயற்பாடு குழந்தை பிறந்தது முதல் இறக்கும் வரை பெற்றோர் செய்யவேண்டிய ஒரு கட்டாயச் செயற்பாடாகும் .
இன்றைய பகுதியில் குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் வரை நாம் கதைக்க வேண்டிய பகுதியை மட்டும் நோக்குவோம்.
பொதுவாக குழந்தைகள் பேச ஆரம்பிக்க முன்னர் நாம் பேச ஆரம்பிக்கும் போது
அவர்களுடைய இயக்க வளர்ச்சித்திறன் அதிகரிக்கின்றது. அதாவது குழந்தை நாம் கதைக்கும் போது சிரிப்பு , அழுகை வரும். அவர்களின் உடலினால் அசைவுகளை ஏற்படுத்தும். மாறாக நாம் அவர்களுடையை தேவையை மட்டும் நிறைவேற்றுவர்களாக இருந்தால் இவர்களுடைய இயக்கத்திறன் , விருத்தித்திறன், மூளை வளர்ச்சி , கட்டுப்பாடுகின்றது.
இவ்வாறு சிறுவயதில் தேவைகளை மட்டும் நிறைவேற்றும் போது கதைக்காமல் குழந்தையை அவர்களுடைய நிலையில் விட்டுவிடுவதால் இதன் தாக்கம் குழந்தை வளர வளர ஆரம்பிக்கின்றன.
அதாவது
♦️மன அழுத்தம் ,
♦️குழந்தை பல்வேறு நேய்நிலைகளுக்கு ஆளாகுதல்,
♦️ உடலுறுப்புகளின் வளர்த்தி குறைதல்
♦️ குழந்தை பேசுவதில் தாமதமாகுதல்
♦️மூளைவிருத்தி குறைவு
இன்னும் பல்வேறு விதமான நோய்களும் குறைபாடுகளும் ஏற்படக்கூடிய நிலைகள் உள்ளன.
இது சமூகத்தில் பலருக்கு இவ்வாறு நிகழ்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே அன்பின்
பெற்றோர்களே !
குழந்தையை வளர்க்கும் போது அவர்களுடைய ஒவ்வொரு இயக்கத்திலும் கரிசனை காட்டவேண்டும். அவர்களை பெற்றேடுப்பது மாத்திரமின்றி பிறந்தது முதல் இறக்கும் வரை அவர்களுடைய விடையத்தில் கவன செலுத்துவது அனைத்து பெற்றோர்களினதும் தலையாயக்கடமையாகும்.
எழுதுவது : பஹ்ரியா பாயிஸ் © , சிறீலங்கா.