எந்த ஒரு நடிகரும் வெறுக்கும் பரிசுகளை லிப்ரொன் ஜேம்ஸும் புதிய ஸ்பேஸ் ஜாம் சினிமாவும் பெற்றன.

பிரபல கூடைப்பந்து நட்சத்திரம் மைக்கல் ஜோர்டான் சித்திரப் பாத்திரங்களுடன் சேர்ந்து நடித்த “ஸ்பேஸ் ஜாம்” சினிமா 1996 இல் வெளியாகி சர்வதேச அளவில் சுமார் 250 மில்லியன் டொலர்களைச் சம்பாதித்தது. அதன் தொடராக இன்னுமொரு கூடைப்பந்து நட்சத்திரம் லிபிரோன் ஜேம்ஸ் நடித்த “Space Jam 2: A New Legacy,”  என்ற சினிமாவை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. 

மைக்கல் ஜோர்டான் போன்று பற்பல வெற்றிகளை விளையாட்டில் சாதித்த லிபிரோன் ஜேம்ஸ் சினிமாவில் மிகப்பெரும் ஏமாற்றம் என்று விமர்சனங்கள் சாடுகின்றன. சிறந்த படம், நட்சத்திரங்கள் போன்றவைக்காக வழங்கப்படும் ஒஸ்கார் விருதுகளுக்கு முன்னர் மோசமான சினிமா, நடிகர்கள் ஆகியவைக்கான பரிசுகளை வெளியிடும்   Golden Raspberry Awards, அமைப்பு  சினிமாவைப் படுமோசமானது என்று குறிப்பிடுகிறது.

“தனது சக நடிகர்களான சித்திரப் பாத்திரங்களுடன் கூடைப்பந்துச் சாதனையாளர் லிபிரோன் ஜேம்ஸ் படுமோசமான நடிகராகத் தெரிகிறார். வார்ணர் பிரதர்ஸ் நிறுவனத்தின் 115 விளம்பரப்படமாக அது தெரிகிறது,” என்கிறது  Golden Raspberry Awards. அந்தச் சினிமாவின் கதாநாயகியாக நடித்த ஜியான் டெ வாலும் படு மோசமான நடிகை என்று சாடப்பட்டிருக்கிறார்.

வெளியிடப்பட்ட அடுத்த வாரத்திலேயே ரசிகர்களால் வெறுக்கப்படும் சினிமா என்று குறிப்பிடப்படும் “Space Jam 2: A New Legacy,” சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமான தொகையைத் தயாரிப்பாளர்களுக்கு உண்டாக்கும் என்று கணிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *