நிறைந்த பலன்கள் பல தரும் சக்தி வழிபாடு
கோ என்றால் கடவுள் அல்லது அரசன் என்று பொருள் இல் என்றால் குடியிருக்குமிடம் கோவில் எனப்படுவது இறைவன் குடியிருக்குமிடம். அந்த மேன்மை பொருந்திய கோயில்களில்
சக்தி வழிபாடு என்பது மிகத் தொன்மையானது. ஆதிகாலத்திலிருந்து இந்த வழிபாட்டை ‘தாய்மை’ வழிபாடு என்று இருந்ததாகக் கூறுகிறார்கள்.
சமயப்பண்பாட்டில் உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது.
சதாசிவன்,விஷ்ணு, மகேஸ்வரன்,ருத்தரன் விஷ்ணு, பிரம்மா, ஆகிய ஐந்து பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை,பிறகு” ஹ்ரீம்” எனும் பிஜத்தில் எழுந்ததாக திருமூலர் கூறியுள்ளார்.
இந்த சக்தியை வழிபாடு செய்வதால் நிறைந்த பலன்கள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.
சிவனிடமிருந்து சக்தியை ஒருபோதும் பிரிக்க முடியாது.உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. எனவே ஆலயங்களிலும், வீடுகளிலும் அம்பிகையை போற்றி அனுதினமும் அவசியம் வழிபட வேண்டும்.
தினமும் வீட்டில் காலையிலும், மாலையிலும் இரு வேளைகளிலும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி,அரளி, மல்லிகை, தாமரை,பல மலர்களால் அர்ச்சித்து மனதால் வழிபடலாம்.
அம்மன் பாடல்களை மனம் உருகி பாடி வழிபட்டால் அம்மனின் அனுக்கிரகம் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அம்மனுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீடுகளில் சாம்பிராணி போட்டு அம்பிகையை
வழிபட வேண்டும்.
வீட்டில் உள்ள தீய சக்திகள், தீய எண்ணங்கள் எல்லாவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி அவளிடம் உள்ளது. அம்மன் வடிவில் பெண் ஒவ்வொரு வீட்டிலும் சக்தியாக வாழ்ந்துக் கொண்டு தான் வருகிறாள்
என்கிறார் அபிராமி பட்டர்.
சிவன் இல்லையேல் சக்தி இல்லை என்பதை நாம் அறிவோம்.
அதே நேரத்தில் சக்தி இல்லாவிட்டால் சிவன் தொழில் நடக்காதே என்பதை அறிந்த உண்மையை இறைவனுக்காக இச் சக்தியால் உயிர்களுக்கு அருள்புரிய விரும்புகிறான்,
ஞான சக்தியால் அவர்களின் தகுதியை தராதரத்தை தேவைகளை கிரியா சக்தியின் துணைக் கொண்டு உயிர்கள் கடைத்தோறும் படியாக அவைகளை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் இறைவன் செய்கின்றான்.
சிவன் இல்லாவிட்டால் சக்தி இல்லை என்பதே உண்மை. ஆகவே சிவன் சக்தியும் ஒன்றைவிட்டு ஒன்று இயங்காது. இவைகளை இரண்டும் சேர்ந்தே இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த வகையில் சிவனை வழிபாடு செய்பவர்கள் அந்தப் பெருமானுடன் சரிபாதியாகக் கலந்திருக்கும் சக்தியும் வழிபட வேண்டும். இவ்வாறு சக்தியை வழிபடுவோர் அந்த சக்திக்கு இருப்பிடமான சிவத்தையும் வழிபடுவதாக அர்த்தம் வேத காலத்திற்கு அடுத்தபடியாக புராணகாலத்தில் மார்க்கண்டேயர் புராணத்தில் வருகின்ற தேவி மகாத்மியம் பெருமைகளை விரிவாக எடுத்துச்சொல்கிறது.
இதில் எருமை வடிவில் வந்த அசுரனை அழித்த மகிஷாசுரமர்த்தினி என்று போற்றப்படுகிறாள்.
புராணங்கள் பலவற்றில் தேவி இந்த உலகத்தை படைத்த “ஜகன்மாதா” என்றும் “ஜெகதாம்பிகை” என்றும் புகழப்படுகிறாள்.
மகாபாரதத்தில் துர்க்கையை வழிபட்டு தகவல் கிடைக்கிறது பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும், ஒரு ஆண்டு அஞ்ஞாத
வாசமும் மேற்கொண்ட பிறகு விராட நாட்டினுள்ளே புகும் நேரத்தில் தருமபுத்திரர் துர்க்கையை வேண்டுகிறார் என்ற குறிப்பு உள்ளது. மற்றோரு இடத்தில்
குருசேஷத்திரப்போரில் தங்களுக்கு வெற்றியை தர வேண்டும் என்று அர்ஜுனன் துர்க்கையை வேண்டுகிறான்.
சங்க காலத்திலும் போரில் வெற்றியைத் தரும் தெய்வமாகவும் காளியை போற்றப்பட்டாள். “கொற்றவை” என்ற பெயரால் அழைத்தனர். கொற்றவைக்கு “பழையோள்” என்ற பெயர் தரப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது கொற்றவை வழிபாடு அவர்களுடைய மிகப்பெரிய பழமையான சக்தி வழிபாடு என்று அறியமுடிகிறது.
இளங்கோவடிகள் வாழ்ந்த காலத்திலும் அம்பிகை வழிபாடும் மிக உச்ச கட்டத்திலிருந்து உள்ளது .அவர்களின் பெயர்களை தொகுத்து ஒரு நாமாவளி பாடல் பாடியிருக்கிறார் மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் சக்திவழிபாடு போற்றப்பட்டுள்ளது.
காரைக்காலம்மையார் அற்புதத் திருவந்தாதி பாடிய போதிலும் சக்தியைப்பற்றியும் பாடி இருப்பதை அறியமுடிகிறது.
அந்தவகையில் நிறைந்த பலன்களை தரவல்ல சக்தியை வழிபட்டு இம்மையிலும் மறுமையிலும் இன்புற்று வாழ்வோமாக.
எழுதுவது : மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) சேலம்.