சிறீலங்காவில் முள்ளிவாய்க்கால் குறித்து தாங்கள் அறிந்ததுண்டா?

சிறீலங்காவின் முள்ளிவாய்க்கால் குறித்து தாங்கள் அறிந்ததுண்டா?

முன்னுரை:
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் நாள் ஆகும்.இது இலங்கைத் தமிழராலும்,உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூறப்படுகின்றது.இதனை ஆங்கிலத்தில் MULLIVAAIKKAL REMEMBRANCE DAY
என்று அழைப்பர்.

பின்னணி:
இலங்கையின் வடகிழக்குப் பகுதியை சிங்கள அரசாங்க அராஜகத்திலிருந்து மீட்பதற்காக தமிழீழ விடுதலை புலிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டன.2007 வரை ஈழப்போரில் குறைந்தது 70,000 பேர் உயிரிழந்தனர்.2008 இன் இறுதிப் பகுதியிலும் , 2009 இன் ஆரம்பத்திலும் ,ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைத் துறையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.இரு தரப்புக்கும் இடையே ஏறத்தாழ 3,00,000 பொது மக்கள் அகப்பட்டனர்.போரின் இறுதிக் கட்டத்தில் ஏறத்தாழ 40,000 வரை இறந்தனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவித்தது.இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாடு அற்ற ஏவுகனைத் தாக்குதல்களில் அகப்பட்டு இறந்தனர் என அவ்வறிக்கை தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசு இழைத்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை தற்போது விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.

நினைவு நாள் நிகழ்வுகளுக்குத் தடை :
இலங்கை அரசு மே 18ஆம் நாளை வெற்றி நாளாக அறிவித்து ராணுவ அணிவகுப்பு களுடன் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. போரில் இறந்த இலங்கை படை துறையினர் வெற்றி வீரர்களாக அறிவிக்கப்பட்டு இந்நாளில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர். ஆனாலும் இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போரில் இறந்த அனைவரும் பிப்ரவரி நாளில் நினைவு கூறப்பட வேண்டும் என பரிந்துரைத்தும் அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லை வித்தியாசம் தெரியும். பதிலாக இலங்கை தமிழர் இறந்த தமது உறவுகளை நினைவு கூற இலங்கை அரசு தடை விதித்தது ஒட்டிய நாட்களில் வடகிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்படுகின்றன.

தமிழர்கள் நிகழ்த்தும் எந்த நினைவுகூறல் ஐயும் ராணுவமும் இலங்கை அரசும் மக்கள் விடுதலைப் புலிகளை நினைவு கூறுவதாக காட்டி வருகிறது. பொது மக்கள் தமது வீடுகளில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தலாம் என ராணுவம் கூறியிருந்தாலும் வீடுகளில் புகுந்து ராணுவத்தினரின் நிகழ்வுகளை தடுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

நினைவு நாள்:
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இன் மத்தியிலும் மே 18ஆம் நாளிலும் அதற்கு அண்மைய நாட்களிலும் இலங்கை தமிழர் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை இறந்த உறவுகளை நினைத்து நினைவுகூர்ந்து வருகின்றனர்.. ஆனாலும் பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்படுகின்றன. தமிழ் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் ஈழத் தமிழர் தாம் வாழும் நாடுகளில் இந் நினைவு நாளை பாரிய அளவில் கூடி நினைவு கூறுகின்றனர்.

முடிவுரை:
இக்கட்டுரையின் மூலம் ஈழத்தமிழர்களின் துன்பத்தினை அறியமுடிகின்றது. போரில் இறந்த வீரர்களுக்கு மே 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாக கொண்டாடப்படுகிறது.

எழுதுவது :

திவ்ய தர்ஷினி . இ
இளங்கலைத் தமிழ் இலக்கியம் முதலாமாண்டு
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,பண்டுதகாரன் புதூர், மண்மங்கலம், கரூர்-6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *