இவர்களும் மனிதர்கள் தான்|வெற்றியுடன் வாழட்டும்
எமது மேதின வணக்கங்கள் உறவுகளே
‘குந்தித் தின்றால் குன்றும் கரையும்’ என்பது பழமொழி.
உடல் உழைப்பால் வரும் பணம் குறைவாக இருந்தாலும் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பது கூடாது,
‘பிச்சை எடுத்தாவது குடும்பத்தை காப்பாற்றுவேன்’ என விளையாட்டாகக் கூட சொல்லாதீர்கள்.
‘எப்பாடுபட்டாவது’ உழைத்து சம்பாதித்து குடும்பத்தை தலை நிமிரச் செய்வேன் என்று சொல்லுங்கள்.
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்,
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று குரல் கொடுத்தான் புரட்சிக் கவிஞன் பாரதி.
உழைப்பாளிகளே! உன் கரத்தின் வலிமை இரும்புக்குக் கூட இல்லை.
இத்தகைய சிறப்பு மிக்க உழைப்பாளிகளை எந்திரமாய் பாராமல் மனிதனாய் பாருங்கள்.
இந்த மேதின நாளில் உழைக்கும் தொழிளாளர்கள் வெல்க ‘வாழ்க’ என
வாழ்த்து முழக்கங்களாக கூறி மகிழ்கிறோம்.
எழுதுவது :பிரமிளா நாகேஷ்வரராஜ்