ஜப்பானில நிலநடுக்கம் பதிவு…!

ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.இஷிகாவா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இன்று காலை 6.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



இது ரிச்டர் அளவில் 5.9ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் தாக்கம் வஜிமா,சுசு ,நோடோ,நனாவ்,அனாமிசு உள்ளிட்ட பல நகரங்களில் உணரப்பட்டுள்ளன.



இதன் காரணமாக மின்சாரம் செயலிழக்கம் ஏற்பட்டது.இதன் காரணமாக புல்லட் ரயில் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.



எனினும் சில மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ரயில் சேவை இயங்கின.இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *