பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்..!

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்றைய தினம் காலை இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.02 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நில நடுக்கமானது 09.13 மணி அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குவெட்டாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இருந்த போதிலும் இந்நிலநடுக்கத்தினால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *