போராடி வாழ்வதே மனித இனம்..!

வாழ்க்கை எனும் புதிர்


வாழ்க்கை எனும் காட்டாறு
நம்மை வளைத்து வளைத்து
கரை சேர்க்கும் … ஆனால்
எப்படியும் கரை சேர்க்கும் …
ஒன்று பிணமாக , அல்லது
உயிரோடு …!

அதை எதிர்த்துப் போராட
இங்கே எவராலும் ஆகாது…
நாம் நினைப்பதெல்லாம்
நடக்காது … இயற்கை
எவர்க்கும் அடங்காது …!

ஆறோடு மிதப்பதுவே …
அமைதி தரும் வாழ்வாகும் …
இங்கே போராட்டம் ஓரளவே …
சரியான சூழலுக்குத் தக்கபடி …
அதில் எதிலும்
ஒரு உயிரையும் பலியாக்காமல் …
போராடி வளர்ந்ததே
இந்த மனித இனம் …
இதில் போராடி போராடி
போன உயிர்களும் பல கோடி …
இங்கே மனிதன்
வேறொரு இனத்தோடு …
அவர்கள் எல்லை மீறிப் போர்
தொடுத்தால் அது சரியே …
அட என்னங்கடா
மனிதனுக்கு
மனிதனே எதிரியென
போராடும் போராட்டத்தை எந்த
வகையில் சேர்ப்பது …
இது தனது விரலே
தனது கண்ணைக் குத்திக் கொண்ட
கதை…!

இங்கே இப்போது
சுயநலமே தன் அறிவாய்
இது தகும் தகாது
எனப் புரியாமல் …
போராடக் கூட்டம் சேர்த்து
போவதெங்கே மானுடமே …!

போராட்டம் சண்டையின்றி
வாழத் தெரியாத பகுத்தறிவு
என்ன பகுத்தறிவோ ?…..
நீ … இன்னும் நான் மனிதன் ,
மனிதன்
எனப் பொய் பேசித் திரியாதே ,
நம்முள் ஒளிந்து கிடக்குது
இன்னும் இன்றும் விலங்குகளின்
குணமே …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *