இலங்கை இந்திய கப்பல் போக்குவரத்து ஓர் பார்வை..!

இலங்கை
இந்திய கப்பல்
போக்குவரத்து ஆரம்பம்
ஆனந்தம்
ஆனாலும் அபாயம்

கள்ளக் கடத்தல்
கையூட்டு
அதிகரிக்கும்
அதிகார துஷ்பிரயோகம்
சட்டம் ஒழுங்கு
திட்டமெல்லாம்
சீர் கெட்டுப் போகும் ❗

யார் கையில் அதிகாரம்
அரங்கேறும்
புதியதோர் அலங்கோலம்
ஆளும்
பெரும்பான்மை அதிகாரம்
நேரும்
சிறுபான்மை இனத்திட்கோர் அவமானம் ❗

நல்லது நாலு நடக்கும்
நாற்பது தீமைக்கு
வழி வகுக்கும்
உள்ளவன் வாழ்வுக்கோ
புதியதோர் வழி பிறக்கும்
இல்லாதவன் வாழ்க்கையில்
ஏற்றம் என்னதான் இருக்கும் … ❓

சுற்றுச்சூழல்
சுகாதாரம்
கேள்விக்குறியாய்
வளைந்து கிடக்கும்
முற்றும் துறந்தது போல் வாழ்க்கையோ
வெருச்சோடி இருக்கும்…. ❗

நித்தம் ஒரு சத்தம் இல்லா
யுத்தம் ஒன்று
சந்ததியை எதிர்நோக்கும்
போதைப் பொருள்
பாவணையே
பொழுது போக்காய்
பிறப்பெடுக்கும் ❗

நல்லதொன்று
நடக்கும் என்ற
எதிர்பார்ப்பு எனக்கில்லை
மற்றவர்கள்
பார்வைக்கு எப்படியோ
என்னுடைய பார்வையில் இப்படித்தான் மாற்றமில்லை….. ❗

அ. அ. நவாஸ்.✍️✍️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *