வறட்சி

வறட்சி
எப்போதும்
மனித
மனங்களில்
மட்டுமே!
நவீனம்
கண்டுபிடித்த
பயன்பாடுகளை
திட்டமிட்ட
புள்ளி
விவரங்களின்
மூலமும்
அர்ப்பணிப்பு
ஈடுபாடு
இவைகளின்
புரிதலில்
வறட்சி
இல்லாமல்
ஆகலாம்.
வீணாவதை
சேகரிக்க
இயலா
துரதிஸ்ட
அரசியல்
வியாபாரிகளால்
நிலத்தை
ஓய்வெடுக்க
விடாமல்
சதாகாலங்களிலும்
விவசாயம்
என்ற
பெயரில்
நஞ்சுகளை
திணிப்பதும்
தன்
கடமை
மறந்ததும்
மறைத்ததும்
காரணமோ?
காரியமோ?
பாலைவனத்தில்
சுவனச்சோலை
அமைக்கும்
நமது
வீரியத்தில்
ஒற்றுமையுடன்
உழைத்தால்
விண்வெளியில்
விவசாயம்
செய்து
போக்குவரத்து
சுற்றுலா
அமைக்கலாம்.
வறட்சியை
யுக
புரட்சி
செய்து
களைவோம்.
மனிதன்
உள்ளவரை
உணவு தேவை
இருக்கும்.
அது
வரை
உயிர் வாழிகள்
விவசாயம்
செய்யும்.
உணவு
சங்கிலி
உள்ளவரை
விவசாயத்திற்கு
முடிவில்லை.
அழிவில்லை.
கண்டங்கள்
வெடித்து
சிதறினாலும்
சில
ஓய்வுக்கு
பின்
புல்
முளைக்க
மழை
சொரிய
வாழ்த்துக்கள்.. கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *