வெற்றியோடு லண்டன் வரும் மாணவர்கள்| சிதம்பரா கணிதப்போட்டி
நாடளாவிய ரீதியில் மாணவர்கள் பங்குபற்றிய மிகப் பலமான சிதம்பரா கணிதப்போட்டியில் இலங்கையில் வெற்றிபெற்ற மாணவர்கள் லண்டன் வருவதற்கு தயாராகின்றனர்.
வரும் ஜூலை மாதம் 13ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப்போட்டியின் கணிதவிழா கலந்துகொள்வதற்காக வெற்றிபெற்ற மாணவர்கள் லண்டன் வருகின்றனர்.
தரம்-7 இல் ஹாட்லிக்கல்லூரியின் J.ஜெபோன், தரம்-8 இல் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் G.அஷ்வின், தரம்-9 இல் ஹாட்லிக்கல்லூரியின் V.மொஷிகீரன், தரம்-10 இல் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் N.துபிராவ், மற்றும் தரம்-11 இல் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தின் M.ஜதுர்ஷன் ஆகியோர் லண்டன் கணிதவிழாவில் பங்குபற்ற முதலிடத்தை தக்கவைத்துள்ளனர்.
இந்த கணிப்போட்டியின் வெற்றியாளர்களை, லண்டன் கணிதவிழா அரங்கில் மாண்பேற்றும் சிதம்பரா கணிதப்போட்டிக் குழு அவர்களுக்கான ஐக்கிய இராச்சிய கல்விச்சுற்றுலா ஒன்றையும் ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறித்த கணிதவிழா அரங்கில் ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு நகரங்களிலும் இடம்பெற்ற கணிதப்போட்டியில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க்கப்டடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது