இந்து சகோதரர்களின் சமர் |யாழில் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்தில் இந்து சகோதரர்களின் சமர் (Battle of Hindu Brothers )  துடுப்பெடுத்தாட்ட போட்டி நிகழ்ச்சியொன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி இந்துக்கல்லூரி அணியை மற்றும்  மானிப்பாய்
இந்து கல்லூரி துடுப்பெடுத்தாட்ட அணிகள் களங்காணும் போட்டியாக இது துவங்கவுள்ளது.

இருபெரும் இந்துக்கல்லூரிகளாக யாழ்மாவட்டத்தில் அமையும் இந்த இரு பாடசாலைகளும், தென்மராட்சியிலும் வலிகாமத்திலும் அமைந்திருக்கின்றமை இந்த போட்டிகளுக்கு வலுவான போட்டித்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறித்த மாபெரும் சமரை முதற்தடவையாக  அங்குரார்ப்பணம்செய்வது  பற்றிய ஊடக சந்திப்பை , இரு பாடசாலைகளின் கல்லூரி அதிபர்களும் , கல்லூரி அணித்தலைவர்களும் வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கீழே உள்ள இணைப்பில் மேலதிக விடயங்களை கேட்கலாம் 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *