கத்திமுனையில் இலங்கை | சர்வதேச நாணயநிதிய இலங்கைக்கான திட்டபணிப்பாளர் சொல்கிறார்
இலங்கையின் பொருளாதார பலம் என்பது இன்னும் பாதிப்படையும் சூழல் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான திட்ட பணிப்பாளர் பீற்றர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
கடன்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளில் இலங்கை ஒரு கத்திமுனையில் இருப்பது போன்றே இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முன்னேற்றத்துடன் முன்கொண்டு செல்ல ஓரளவு போதுமான நிலை இலங்கையிடம் இருக்கிறது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இன்று இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே திட்டப்பணிப்பாளர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனடிப்படையில் கடன் மறுசீரமைப்பு விரைவுத்தனத்ததை தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டியது இலங்கைக்கு மிக அவசியமாகும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.