சிறப்புக்கள் பொருந்திய மொரகாமலை ஶ்ரீ முருகன் தேவஸ்தானம்
மத்திய மலை நாட்டில் கண்டி மாவட்டத்தில் மெதமஹநுவர நகரில் மொரகாமலை என்ற கிராமத்தில் ,மஹாவலி நதிக்கரையில் கோயில் கொண்டு எழுந்து அருள் பாலிகும் முருகன். பல மக்களின் குறைகளை தீர்த்து ஆசி வழங்கிவருகிறார்.
முருகன் எழுந்தருளி அருள் பாலிக்கும் மலை , முருகன் இருக்கும் மலை முருகா மலை என்பது நாளடைவில் மருவி மொரகாமலை என்று பெயர் வர காரணமாயிற்று.
இப்பிரதேசத்தில் சிங்களவர்கள் அதிகளவில் வாழ்கிறார்கள் ,இந்த ஆலயத்திற்கு அதிகளவில் சிங்கள மக்களே செல்கிறார்கள் .ஆறு கால பூசையும் ,விசேட தின பூசைகளும்,வருடாந்த மகோட்சவமும் நடைப்பெறும்.மகோட்சவத்தின் போது பல் வேறு பிரதேசங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் காவடிகள் வருவது சிறப்பம்சமாகும்.
திருவிழாக்காலங்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்து இந்த ஆலயத்திற்கு மக்கள் வருகை தந்து முருகனின் அருளை பெற்று செல்கின்றனர்.
பலர் இந்த ஆலயத்திற்கு குழந்தை வரம் வேண் 5டியும், திருமணம் நிகழ்ந்திட வேண்டியும் இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விஷ்ணு மற்றும் விகாரைக்கு வரும பக்தர்கள் முருகன் ஆலயத்தையும் தர்சித்துவிட்டு செல்லும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.
கண்டி மஹியங்கனை நெடுஞ்சாலையில் அமையப்பெற்றிருக்கும் இந்த ஆலயத்தை தர்சிக்காமல் எந்த நெடுந்தூர பேருந்தும் பயணிக்காது என்பது ஒரு சிறப்பம்சமாகும்.
சிங்களவர்களும் தமிழர்களும் ஒருங்கிணைந்து வழிப்படும் ஓர் ஆலயமாகவும்,நல்லிணக்க மார்க்க மாகவும் இந்த ஆலயம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.நீங்களும் மெதமஹநுவர சென்றால் முருகாமலை முருகன் ஆலயத்தையும் தர்சித்துவிட்டு வாருங்கள்.