T20 – Super 8 போட்டிகள் இன்று துவக்கம்

T20 உலகக்கிண்ண போட்டிகளின் குழுநிலைப்போட்டிகள் நேற்றைய நாள்  நிறைவுக்கு வந்ததைத்தொடர்ந்து,
இன்று super 8 சுற்றுக்கான போட்டிகள் துவங்கவிருக்கின்றன.

இந்தத்தடவை அடுத்த சுற்றுக்கு வழமையாக தெரிவாகும் சில அணிகள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், போட்டிகள் மிக விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நியூசிலாந்து , பாகிஸ்தான், சிறீலங்கா போன்ற அணிகள் வெளியேற்றப்பட்டிருப்பது முக்கிய விடயம்.
குறிப்பாக அமெரிக்க அணி தங்கள் சொந்த மைதானங்களில் மிகச்சிறப்பாக விளையாடி Super 8 அடுத்த சுற்றுக்குள் உள்நுழைந்திருக்கிறது
மேற்கிந்திய தீவுகள் இனிவரும் போட்டிகள் அனைத்தையும் ஏற்பாடு செய்கின்றன.
அதன்படி மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் நேரப்படி இன்று  இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதற்போட்டியில் அமெரிக்க அணியும் தென்னாபிரிக்க அணியும் களங்காணவுள்ளது.

முழுமையான போட்டிவிபரங்களை கீழே காணவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *