ஆப்கானை இலங்கை வென்றது | T20 உலகக்கிண்ணம்

T20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய குழுநிலைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி  முதலில் துடுப்பெடுத்தாடிய  ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்ப்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகக்கூடுதலாக  28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும் லஹிரு குமார 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

தொடர்ந்து  துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 9  பந்துகள் மீதமிருக்க  4 விக்கெட்களை மாத்திரம்  இழந்து 148 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய  சில்வா ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதன்படி  இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப்பதிவு செய்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக   இலங்கை அணியின் சார்பில் 4 ஓவர்கள் பந்துவீசி 13 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3விக்கெட்டுகளை கைப்பற்றிய வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *