இங்கிலாந்து நியூசிலாந்தை வென்றது| T20 போட்டியில் நியூசிலாந்தின் முதற் தோல்வி

T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டியில் இன்றைய இன்னுமோர் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை  20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.


இதன்படி பலமான அணியாக எதிர்பார்க்கப்படும்  நியூசிலாந்து அணி தன் முதற் தோல்வியைப்பெற்ற போட்டியாக நிறைவுகண்டது.


முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களைக்குவித்தது.
ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 73 ஓட்டங்களும் அலெக்ஸ் ஹேல்ஸ் 40பந்தைகளில் அடித்த 52 ஓட்டங்களும் இதில் அடங்கும் ஓட்ட எண்ணிக்கைகள் ஆகும்.


தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
நியூசிலாந்து அணி சார்பில் கிளென் பிலிப்ஸ் 36 பந்துகளில் அடித்த 62 ஓட்டங்களும் கேன் வில்லியம்சன் 40 பந்துகளில் அடித்த 40 ஓட்டங்களும் இதில் அடங்கும்.

அதன்படி நியூசிலாந்து அணி 29 ஓட்டங்களால் இங்கிலாந்திடம் தோல்வியைத்தழுவியது.
போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் அறிவிக்கப்பட்டார்.

இன்றைய தோல்வியின் பின்னரும் கூட  புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *