சவூதி மெக்காவில் யாத்திரிகர் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது
சவூதி அரேபியா நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வெப்பம் வாட்டி வதைக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இதனால் வருடாவருடம் மெக்காவிற்கு புனித பயணம் சென்றவர்கள், இந்தவருடம் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு கடந்த நாள்களில் அந்த இடங்களில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸ் அளவு பதிவாகியிருக்கிறது.
இந்த வெப்பநிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல், மெக்கா புனித பயணம் மேற்கொண்டிருப்பவர்கள் கடும் கஸ்டத்தையும் உடல் ரீதியான தாக்கங்களையும் எதிர்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
உயிரிழக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1000 யாத்திரிகர்கள் பலியாகியுள்ள நிலையில் இதில் இந்தியர்களும் அடங்குவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.