தனெட் தமிழ் கலைக்கூடம் வழங்கும் கலைவிழா
இங்கிலாந்தின் கென்ட் மாநிலத்தில், தனெட் நகரத்தில் அமைந்திருக்கும் கலைக்கூடத்தின் கலைவிழா இந்த வார விடுமுறைநாளில் நடைபெறவுள்ளது.
வரும் ஜூன்மாதம் 22 ம் தேதி மாலை 4 30 மணிக்கு துவங்கும் இந்த கலைவிழா, இரவு 10 மணிவரை தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பலரும் பங்குபற்றும் இந்ந நிகழ்ச்சி , இரண்டாவது தடவையாக தனெட் கல்விக்கூடத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆசிரியை கௌசிகா மயூரன் அவர்களின் மாணவர்கள் கலந்து சிறப்பிக்கும் இந்த நிகழ்ச்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆசிரியை அவர்களால் நெறிப்படுத்தப்பட்டவை ஆகும்.
குறித்த நிகழ்ச்சியானது இங்கிலாந்தின் டோவரில் (Dover) அமைந்திருக்கும், St Margaret Hall இல் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.