ஜேர்மனி அடித்த கடைசிநேர கோல்| புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்தது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐரோப்பிய கிண்ணத்திற்கான குழுநிலைப்போட்டிகளில், இன்று முக்கியமான போட்டியாக, சுவிற்சர்லாந்து மற்றும் ஜேர்மன் அணிகள் மோதின.
போட்டியின் முதற்பாதியில் 1 கோல் அடித்து முன்னணியில் நின்ற சுவிற்சர்லாந்து அணிக்கு 92 நிமிடத்தில் ஜேர்மனி கோலை அடித்து சமனிலைப்படுத்தியது.
போட்டியின் 28 நிமிடத்தில் சுவிஸ் அணியின் D. Ndoye தனக்கு கிடைத்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தி ஜேர்மனி வீரர் பந்தை நோக்கி ஒருபக்கம் பாய, மற்றையபக்கம் பந்தை கோல்கம்பங்களுக்குள் அடித்தார்.
அதன்பின்னர் கிடைத்த பல வாய்ப்புக்களும் இரு அணிகளுமே நழுவவிட்டிருந்தன.
இருந்தாலும் விடாமுயற்சியாக ஆக்ரோசமாக ஆடிய ஜேர்மனி, நிறைவில் ஒரு கோலை அடித்து தோல்வியிலிருந்து தப்பியது. ஜேர்மனி அணியின் வீரர் N. Füllkrug தலையால் மோதி பந்தை கோல்கம்பங்களுக்குள் நுழைத்தார்.
அதன்படி சமனிலையில் போட்டி நிறைவுக்கு வர ஜேர்மனி அணி புள்ளிப்பட்டியலில் 7புள்ளிகளுடன் முதன்னிலைக்கு வந்தது. தொடர்ந்து 2 வது இடத்தில் 5 புள்ளிகளுடன் சுவிற்சர்லாந்து தன்னை தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது