நான்காவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது ஸ்பெயின்

ஐரோப்பிய வெற்றிக்கிண்ணத்திற்கான இன்றைய இறுதிப்போட்டியில் அபாரமாக ஆடிய ஸ்பெயின்,  வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.


ஐரோப்பியக்கிண்ண வரலாற்றில் நான்காவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிய அணியாக ஸ்பெயின்  இடம்பிடித்தது.

ஆட்டத்தின் முதற்பாதி சமநிலையில் நிறைவுக்கு வர , ஆட்டத்தின் இரண்டாம் பாதி சூடுபிடித்தது.
இரண்டாம் பாதி நேர ஆட்டம் துவங்கி , ஆட்டத்தின் 47 வது நிமிடத்தில்  மிகப்பலமாக ஆடிய ஸ்பெயின் அணி, முதல் கோலை அடித்தது. ஸ்பெயின் வீரர் வில்லியம்ஸ் தனது காலுக்குள் வந்த பந்தை சரியாக கோல்கம்பத்துக்குள் நுழைத்து கோலாக்கினார்.


தொடர்ந்து ஆட்டம் இன்னும் ஆக்ரோஷமாக, இங்கிலாந்து அணியின் வீர்ர் பால்மர் மிகவும் சிறப்பாக ஒரு கோலை அடித்தார்.
இந்நிலையில் ஆட்டம் சமநிலையாக , ஸ்பெயின் கோல் அடிக்க வேண்டும் என்ன வேட்கையோடு வீறுகொண்டு இன்னுமோர் கோலை அபாரமாக அடித்தது. ஸ்பெயின் வீரர் Oyarzabal, ஆட்டத்தின் 86 வது நிமிடத்தில்  கோலை அடித்ததும் , ஸ்பெயினின் வெற்றி உறுதியானது.


இங்கிலாந்து பல வாய்ப்புக்களை பெற்றிருந்தாலும் ,ஸ்பெயின் கோல்காப்பாளர், மற்றும் வீரர்கள் தங்கள் பலத்தோடு அதைத்தடுத்து வெற்றியை உறுதிப்படுத்தினர்.
நிறைவில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று ஐரோப்பிய சாம்பியனானது ஸ்பெயின்.


2012 ம் ஆண்டு இத்தாலியை வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த ஸ்பெயின் இந்த வருடம் கடந்த சம்பியன்களான இத்தாலியிடம்  இருந்து பட்டத்தை பறித்து, தாமே ஐரோப்பிய  சம்பியன்கள் என்று ஸ்பெயின் அணி வெற்றிவாகை சூடியுள்ளது.


இன்னுமோர் இறுதிப்போட்டியில் வெற்றிக்கிண்ணக்கனவை நனவாக்கமுடியாமல்  ஹரி கேன் தலைமையிலான அணி தோற்று வெற்றிக்கிண்ணத்தை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *