ஹாட்லியின் வெற்றியாளர்களை கௌரவித்த Hartleyites Sports Club UK
அகில இலங்கை ரீதியாக வெற்றிபெற்று, இங்கிலாந்துக்கு வந்த ஹாட்லியின் வெற்றி மாணவர்களை, ஐக்கிய இராச்சிய ஹாட்லியின் பழையமாணவர்கள் ஒருங்கிணைந்த, ஐக்கிய இராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழகம் (Hartleyites Sports Club UK) நேற்று 21/07/2024 அன்று கௌரவித்தது.
சிதம்பரா கணிதப்போட்டியின் இருவேறு கட்ட பரீட்சைகளை தாண்டி, அகில இலங்கை ரீதியாக தமிழ் பேசும் மாணவர்களிடையே முதல் நிலையில் வெற்றிபெற்ற மாணவர்கள் இங்கிலாந்தின் கணிதவிழா அரங்கில் கடந்த ஜூலைமாதம் 13 ம்திகதி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
இதில் இந்த வருடம் ஹாட்லிகல்லூரியிலிருந்து இருமாணவர்கள் தெரிவாகியிருந்தனர்.
ஆண்டு 7 இல் ஜெரோம் குணராஜ் ஜெபோன், மற்றும் ஆண்டு 9 இல் வாணிமுகுந்தன் மோஷிகீரன் ஆகியோர் தெரிவாகி லண்டனுக்கு பயணமாகி வந்திருந்தனர்.
கணித விழா அரங்கில் பெற்ற சிறப்பான கௌரவத்தை தொடர்ந்து , சிதம்பரா கணிப்போட்டி நிர்வாகம் ஏற்பாடுசெய்த கல்விச்சுற்றுலாவில் கடந்த இருவாரங்களாக பங்குபற்றி வரும் நிலையில் , இந்த விசேட சந்திப்பை Hartleyites Sports club UK சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
ஹாட்லியின் பழையமாணவர்கள், மற்றும் ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் இணைந்த இந்த சந்திப்பில் , ஹாட்லியின் வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.