பாரீஸில் துவங்கியது ஒலிம்பிக் 2024
உலகமே எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸில் மிகக்கோலாகலமாக துவங்கியது.
நூறு ஆண்டுகளுக்குப்பின் இந்தத்தடவை ஒலிம்பிக் போட்டிளை ஏற்பாடு செய்ய வாய்ப்பைப் பெற்ற பிரான்ஸ், மிகச்சிறப்பாக ஆரம்பவிழா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
தங்கள் நாட்டின் சிறப்புக்களையும் கலாசார , பண்பாட்டு அடையாளங்களையும் , புகழ்பெற்ற பலரையும் பிரதிபலித்து , செயின் நதிக்கரையில் இருந்து மக்கள் பார்த்து ரசிக்கும்படியாக இந்த ஆரம்ப நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது.
ஆரம்ப விழாவில் பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் , ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
சிறப்புடன் துவங்கிய இன்றைய
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இடம்பெறும் 42 வகைப்படுத்தப்பட்ட விளையாட்டுக்கள் , 329 பிரிவுகளாக போட்டிகள் வகைப்படுத்தப்பட்டு இடம்பெறவுள்ளன.
பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகப்பலப்படுத்தப்பட்டு , இன்றைய ஆரம்பவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்தும் போட்டிகள் நடைபெறவிருக்கும் வரும் நாள்களிலும், அதேபோலவே ஏற்பாடுகள் மிகப்பலமாக. இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.