T20 முதற்போட்டியில் இந்தியா வென்றது
இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள இந்திய அணி மோதிய முதலாவது T20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே இந்த வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்து வீசத் தீர்மானித்தது.
பல்வேறு வாய்ப்புக்களையும் தவறவிட்டு களத்தடுப்பில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக இந்திய அணி ஏழு விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை குவித்தது.
இந்திய அணிக்கு தலைமை தாங்கிய சூர்யகுமார் யாதேவ் 26 பந்துகளில் 56 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 19 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது
அதன்படி முதலாவது போட்டியில் 43 ஓட்டங்களால் இந்திய அணியிடம் இலங்கை அணி மண் கவ்வியது.
ஆட்ட நாயகனாக இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதேவ் தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.