உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் என்ற இடத்தை சீனா 2028 இல் பிடித்துவிடும்.

இதுவரை செய்யப்பட்ட கணக்கீடுகளைத் தவறாக்கிவிட்டுச் சீனா 2028 இலேயே உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்தைப் பெற்றுவிட அவர்கள் கொரோனாப் பெருந்தொற்றைக் கெட்டிக்காரத்தனமாகக் காரணமாக இருக்கிறது. அமெரிக்காவைப் போலன்றி மிக வேகமாக நாட்டின் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு வியாதி நாடு முழுவதும் தொற்றாமல் செய்துவிட்டதால் அவர்களால் வேகமாக வழமை நிலைக்குத் திரும்ப முடிந்திருக்கிறது.

பொதுவாகக் கவனித்தால் கொரோனாப் பெருந்தொற்றுச் சர்வதேசப் பொருளாதாரத்தில் அதிக பணவிக்கமாகவே எதிரொலிக்கும், மெத்தனமாக வளரும் பொருளாதாரத்தில் அல்ல என்கிறது இக்கணிப்பைச் செய்திருக்கும் நிறுவனம் (Centre for Economics and Business Research). 

ஜப்பான் தொடர்ந்தும் பல வருடங்களுக்கு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தைப் பிடித்து நிற்கும். 2030 ம் ஆண்டளவில் இந்தியா அந்த இடத்தைக் கைப்பற்றி ஜேர்மனியை ஐந்தாவது இடத்துக்குத் தள்ளிவிடும். பிரிட்டன் தனது ஐந்தாவது இடத்திலிருந்து 2024 ம் ஆண்டளவில் ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும்.               

2021 – 2025 ஆண்டுக்காலத்தில் சீனாவின் பொருளாதாரம் வருடாவருடம் 5,7 விகிதத்தால் வளரும். 2021 இன் பின்னரே அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டும் வளர ஆரம்பிக்கும். 2020 இல் உலகின் 19 விகிதமான பொருளாதார உற்பத்தியைச் செய்யும் ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் விலகுவதன் காரணத்தால் 2035 இல் 12 விகிதமாகக் குறையும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *