இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு…!

இரத்த புற்று நோயின காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் நேற்றைய தினம் தனது 71 வயதில் காலமானார்.

புற்று நோயை குணப்படுத்த பி.சி.சி .ஐ ஒரு கோடி ரூபா நிதி உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவ மணையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் நாடு வந்திருந்தார் .இந்நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் 40 டெஸ்ட் மறறும் 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.1982-1983ஆம் ஆண்டுகளில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும் அடித்துள்ளார்.மேலும் இவர் 12,136 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த காலத்தில் தனது சேவைகளை மிக சிறப்பாக வழங்கியிருந்தார்.இவரின் பயிற்சியின் கீழே 2000 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் போட்டியில் இந்திய அணி 2ம் இடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரின் மறைவிக்கு பிரதமர் மற்றும் கிரிக்கெட் தரப்பினரும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *