ஜனாதிபதி தேர்தலில் நாமல் போட்டி..!
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாராக நாமல் ராஜபக்க்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ளது.இந்நிலையில் எதிர்வரும் 15 ம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இந்த தேர்தல் அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே தொழிலதிபர் தம்மிக்க பெரேரா களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் அவர் வாபஸ் பெற்ற நிலையில் தற்போது நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே முன்னால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதோடு,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி நீங்கி இருந்தார் .பெரும் பொருளாதார பின்னடைவை கடந்த காலங்களில் இலங்கை சந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே நாமல் ராஜபக்ஷவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.