அருள் தரும் ஆடிப்பூரம்..!
ஆடி மாதம் என்றாலே அனைத்து மக்களுக்கும் சிறப்பு. ஆடி மாதத்தில் அம்மன் வழிப்பாடு மிகவும் முக்கியத்துவம் பெருகிறது.
ஆடி செவ்வாய்,ஆடி வெள்ளி,ஆடிப்பூரம்,நாக சதுர்த்தி,வரலக்ஷ்மி விரதம் என்பன ஆடி மாதத்தில் வருகின்றன. அன்னை அம்பிகையை மனதார வழிப்பட வாய்ப்பு மிகுந்த மாதமாக ஆடி மாதம் வருகிறது.
இந்த ஆடி மாதத்தில் இன்று 07.08.2024ம் ம் திகதி ஆடிப்பூரம் வெகு சிறப்பாக அனைத்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடபபடுகிறது.
இன்றைய தினம் ஆண்டாள் பிறந்த தினமாகவும் கொள்ளப்படுகிறது.இன்றைய தினம் குழந்தை வரம் வேண்டியும்,திருமணம் நடக்கவேண்டியும் அம்பிகைக்கு வளையல்கள் வைத்து வழிப்பட்டு அம்பிகையின் ஆசிகளை பெற்றுக்கொள்வார்கள்.
இதன் மூலம் வாழ்க்கையானது வளம் பெரும் என்பது ஐதீகம்.
இலங்கை,இந்தியா,நேபாளம்,மலேசியா,சிங்கப்பூர்,மற்றும் இந்துக்கள் வாழும் நாடுகளிலும் ஆடிப்பூரம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இலங்கையில் பல ஆலயங்களில் ஆடிப்பூர நிகழ்வுகள் மிக சிறப்பாக இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு அம்பிகையின் ஆசியினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.