மீண்டும் போராட்டம்..!
பங்களதேசத்தில் மீண்டும் இன்றைய தினம் மாணவர்களால் போராட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பங்களதேஸின் உயர் நீதி மன்றத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைமை நீதிபதி ஒரு மணிநேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
ஏற்கனவே இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக பங்களதேஸின் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்மடைந்தார்.
இதனையடுத்து இராணவம் ஆட்சியை கையில் எடுத்த நிலையில் இடைகால அரசாங்கம் நிறுவப்பட்டது.இதற்கு முஹமது யூனுஸ் தலைவாராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் தான் மீண்டும் போராட்டம் நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.