தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்..!

தாய்லாந்து அரசியலமைப்புக்கு முரணாக மந்திரி ஒருவரை நியமித்ததன் காரணமாக தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து அரசின் மந்திரி சபையில் தாய்லாந்து பிரதமரால் பிச்சி சைபான் என்பவர் மந்திரியாக நியமிக்கப்பட்டார்.இவ்வாறு நியமிக்கப்பட்ட நபர் 2008 ஆம் ஆண்டு நீதிபதி ஒருவருக்கு இலஞசம் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைதி 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர் ஆவார்.இந்த நியமனம் சர்ச்சைக்குள்ளான நிலையில் அவர் பதவியை இராஜனாமா செய்தார்.

இதற்கமைய குறித்த நபரை மந்திரியாக நியமிக்க பரிந்துரை செய்த குற்றச்சாட்டில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் உறுப்பினர்களை நியமிக்க உரிமை யுள்ள போதும்.சிறையிலிருந்த நன்னடத்தை இல்லாத ஒருவரை நியமித்ததன் காரணமாக அவர் அரசியலைமைப்பு விதிகளை மீறிவிட்டார் என்று தெரிவித்து அரசியலமைப்பு நீதி மன்றம் ஸ்ரெத்தா தவிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய பிரதமர் வரும் வரையில் தாய்லாந்தில் காபந்து அரசாங்கம் நடைப்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *