இந்த வைரஸ் பரவும் அபாயம்..!
ஆப்ரிக்காவில் குரங்கு அம்மை நோயானது அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்பாக்ஸ் என்று அழைக்கப்படுகின்ற இந்த நோயானது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.இது மனிதர்களுக்கிடையில் எளிதாக பரவாது.
இந்நோயானது 2022ம் ஆண்டு ஆப்ரிக்க நாடுகளில் கண்டரியப்பட்டது.தற்போது இந்நோயானது பல நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.17 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆப்ரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 524 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நோயின் அதிகரிப்பின் காரணமாக உலக சுகாதார தாபனம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.ஐ.நா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழு கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் ஆனது பல நாடுகளில் பரவக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.