விண்ணில் அல்ல மண்ணில் தான் இருக்கிறது..!
🩷❤️🧡💛💚🩵💙💜🩷❤️💛 *தேவதை தினம்* *சிறப்பு கவிதை* *என் தேவதையே..!!!*
🩷❤️🧡💛💚🩵💙💜🩷❤️🧡
பல பெண்களை
கவிதையில்
படைக்கும் அளவிற்கு
படைத்த பிரம்மன்
உன்னைத்தான்
கவிதையாகவே
படைத்து விட்டான்….
கவிதையை
எழுதிவிட்டு படிப்பார்கள்
நான்தான்
கவிதையைப் படித்து விட்டு
எழுதுகிறேன்…
கவிதை அசை சீர்
எழுத்து
அடித்தொடை என்னும்
உறுப்புக்களை கொண்டு
பிறக்கும்…
இங்குதான்
கை கால் கண்
இடுப்பு மார்பு என்னும்
உறுப்புகளைக் கொண்டு
பிறந்திருக்கிறது….
நீ நல்லா
கவிதை எழுதுகிறாய் என்று
என்னைப் பாராட்டுவார்கள்
ஆனால்
அவர்ளுக்குத் தெரியாது
உன்னிலிருந்து காப்பியடித்து
நான் எழுதுகிறேன் என்பது…
கவிதை
சொல்லால் ஆக்கப்படும்
என்று தான்
நினைத்திருந்தேன்….
உன்னைப்
பார்த்தப் பிறகு தான் தெரிந்தது
செல்லாளும் ஆக்கப்படும் என்று….
கவிதையைப் பெற்றவர்கள்
புத்தகம் போட்டு
மகிழ்வார்கள்…….
நீ தான்
ஆடை போட்டு
மகிழ்ந்திருக்கிறாய்….
தேவதை
விண்ணில்தான்
இருக்க வேண்டும்
என்கின்ற விதியை
நீதானடி மாற்றி எழுதினாய்
மண்ணில் பிறந்து…. *கவிதை ரசிகன்*
🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍