போலியோ முகாம் முன்பாக இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்..!
பாலஸ்தீனத்தில் போரால் அதிகளவான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் .இந்நிலையில் தொற்று நோய்களும் பரவ ஆரம்பித்துள்ளன.இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் போலியோ சொட்டு முகாம் நடத்த முடிவு செய்தது.
இதற்கமைய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கிடையில் 8 மணிநேர போர் நிறுத்தப்பட்டு போலியோ மருந்து வழங்க நடவடக்கை எடுக்கப்பட்டது.
இதறகமைய நாசர் மருத்துவமனையில் முகாம் நடத்தி சில குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கிக்கொண்டிருக்கும் சமயம் இஸ்ரேலினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காஸா முனை பகுதியில் ஒன்றான நசீரத் பகுதியில் நடந்த வானவெளி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் 09 பேர் ஒரே குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை காஸா பகுதியில் மேறகொள்ளப்பட்ட தாக்குதலினால் 30 ற்கும் மேறபட்டோர் உயிரிழந்துள்ளனர்.