“யாகி” சூறாவளியால் கடும் பாதிப்பு..!
யாகி சூறாவளியின் தாக்கத்தால் வியட்நாமில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்றைய தினம் யாகி சூறாவளியானது குவாங் நின்,ஹைபாங்க் ஆகிய இடங்களை மணிக்கு 149 கீ.மீ வேகத்தில் கரைகடந்தது. இதன் காரணமாக பலத்த காற்றும் மழையும் ஏற்பட்டது.
வீதிகள் அனைத்தும் நீரில் மூழ்கின,மரங்கள் சாய்ந்தன,மின்கம்பங்கள் சாய்ந்தன, 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது.4 விமான நிலையங்கள் மூடப்பட்டது.நெற் பயிர்கள் மூழ்கி நாசமாகியது.மேலும் மண்மேடுகள் சரிந்து விழுந்தன. இடர் பாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததுடன் 176 பேர் காயமடைந்துள்ளனர்.
இராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த புயல் காரணமாக வடமேற்கு பிலிப்பைன்ஸ்,சீனா ஆகிய நாடுகளும் பாதிப்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.