இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.நா ஊழியர்கள் உட்பட 34 பேர் உயிரிழப்பு..!
இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.நா ஊழியர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
நுசிராட்டில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மக்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் குறிப்பிட்ட பாடாலை மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது ஐ.நா ஊழியர்கள்,மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக ஐ.நா தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.”காஸாவில் நடப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.12000 பேர் தங்கியிருந்த பாடசாலை மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இதில் தமது ஊழியர்கள் 06 பேர் உள்ளடங்குவர்.சர்வதேச மனிதபிமான சட்டத்தின் இந்த வியத்தகு மீறல்கள் இப்போது நிறுத்தப்படவேண்டும்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த வருடம் முதல் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்காணோர் உயிரிழந்ததுடன்,பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.