‘பெயின்கா’ சூறாவளியானது இன்று கரையை கடக்கும்..!
ஷாங்காய நகரிலுள்ள விமான நிலையங்களில் 100 மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இது 600 ராக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் ‘பெயின்கா’ சூறாவளி நிலை கொண்டுள்ளது.
இந்த சூறாவளியானது 151 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என சீன வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும்,254 மி.மீ அளவிலான மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.இதன் காரமாண பாதுகாப்பு நலன் கருதி 09 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஷாங்காய் நகரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.