100 உக்ரைனின் ‘ட்ரோன்’ களை தாக்கியளித்த ரஷ்யா..!

ரஷ்யாவின் மீது உக்ரைன் 101 ட்ரோன்களை கொண்டு தாக்குதல் மேற்கொண்ட வேளை அவைகளை தடுத்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரையன்ஸ் பிராந்தியத்தில் 53,க்ராஸ்னோடர் பகுதியில் 18,கலுகா,ட்வெர்,பெல்கோரோட்,ஸ்மோலென்ஸ்க்,குர்கிஸ்,அசோவ் கடற்பிரதேசம் ஆகிய இடங்களில் பல ட்ரோன்கள் தாக்கியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே டிகோரெட்ஸ்க் பகுதியில் 2 ட்ரோன்கள் விழுந்து தீ பரவியது. இதன் காரணமாக இப்பிரதேசத்திலிருந்து 1200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதே வேளை உக்ரைனின் பல இடங்கள் மீது ரஷ்யா நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *