புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு..!
நிறைவேற்று அதிகாரமுடைய 09 வது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றது.இதல் அதிகூடிய வாக்குகளான 5,740,179 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.
இன்று 23ம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூர்ய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.