கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது..!
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா இன்று பரிசோதனை செய்துள்ளது.சீன இராணுவம் பசுபிக் பெருங்கடலில் இந்த சோதனை செய்துள்ளது.ஆயுத செயல் திறன்,இராணுவ பயிற்சி திறன் என்பவற்றை ஆய்வு செவதற்காக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சோதனை நடவடிக்கையில் சீன இராணுவம் நிர்ணயித்த இலக்குகளை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனையின் போது கணிக்கப்பட்ட கடல் பகுதியில் ஏவுகணை சரியாக விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை இந்த சோதனை நடவடிக்கை தொடர்பாக அண்டை நாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இந்த சோதனை நடவடிக்கை சீன இராணுவத்தின் வருடாந்த பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த சோதனை நடவடிக்கை எந்த நாட்டிற்கும்,எந்த இலக்கிற்கும் நடத்தப்படவில்லை என சீனா தெரிவித்துள்ளது.