ருவாண்டாவில் இந்த வைரஸினால் 300 ற்கும் அதிகமானோர் பாதிப்பு..!
ருவாண்டாவின் 07 மாவட்டங்களில் மார்பர்க் என்ற வைரஸ் பரவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நோயிற்கான தடுப்பூசிகள் தற்போது இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இரத்த கசிவு உடனான காச்சல் காணப்படும் எனவும் 88 சதவீதம் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ருவாண்டாவில் இந்நோய் தாக்கத்திற்குள்ளாகி 08 பேர் உயிரிழந்ததுடன் 300 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோயானது தன்சானியா,காங்கோ,கென்யா,தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.