இஸ்ரேலினுள் பிரவேசிக்க ஐ.நா பொது செயலாளர்க்கு தடை..!
இஸ்ரேலினுள் ஐ.நா பொது செயலாளர் நுளைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேலிய மண்ணில் ஐ.நா பொது செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர்.இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன.இதனை செய்யாமல் மௌனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேலிய மண்ணில் கால்வைக்க தகுதி கிடையாது . ஹமாஸ்,ஹிஸ்புல்லா,ஹவுதிமற்றும் தற்போதைய ஈரானிய பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேலிய வரலாற்றில் ஒரு கறையாக நினைவு படுத்தப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
இதே வேளை பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்யப்போவதாக ஈரான மிரட்டல் விடுத்துள்ளது.எனினும் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதே வேளை ஈரான் தொடுத்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல்,ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.