இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திய பிரான்ஸ்
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தி உள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
கஸாவில் நடந்து வரும் போருக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்காக பிரானஸ் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.இதே வேளை மற்ற நாடுகளும் ஆயுதங்களை வழங்க கூடாது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கருத்து தெரிவித்துள்ளார்.
“கடந்த ஆண்டு மட்டும் இஸ்ரேலுக்கு 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பில் ஆயுதங்களை பிரான்ஸ் வழங்கியுள்ளது.
ஆனால் அதிகளவு ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கும் முதன்மை நாடாக பிரான்ஸ் இருந்ததில்லை.இன்றைய அரசியல் ரீதியான தீர்வுக்கு என்ன தேவை என்றால் காஸாவில் நடத்தப்படும் போருக்கு ஆயுதங்கள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்