இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்..!
இன்றோடு இஸ்ரேல் பாலஸ்தீன போர் இடம் பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகிறது.கடந்த வருடம் இதே தினத்தில் ஹமாஸ போராளிகள் இஸ்ரேலிற்குள் உட் பிரவேசித்து தாக்குதல் நடத்தியதுடன் பலரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றிருந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது போரை தொடுத்தது.இதற்கமைய தொடங்கப்பட்ட போரானது ஹமாஸ் போராளிகள் அடியோடு அழியும் வரை இந்த யுத்தம் தொடரும் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக பல்லாயிரகணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன்,பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.பலர் இடம் பெயர்ந்துள்ளதுடன் ,அகதி முகாம்களிலும் தங்கியுள்ளனர்.எனினும் போர் ஓய்ந்த பாடில்லை, இந்த போரில் அமெரிக்கா,இங்கிலாந்து என மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.பாலஸ்தீனத்திற்கு லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இராணுவத்தினரும் ,ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன. இந்த பட்டியலில் அண்மையில் ஈரானும் இணைந்துக்கொண்டது.
இந்த போரில் அமெரிக்க தனது போர் கப்பல் களை செங்கடற் பரப்பில் நிறுத்தி தனது முழுமையான ஒத்துளைப்பை வழங்கிவருகிறது இஸ்ரேலுக்கு,மேலும் ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.
போரை நிறுத்தும் முகமாக கட்டார் மத்தியஸ்தம் வைத்து முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது.
இதனிடைய ஹமாஸ் போராளிகள் தரப்பிலும்,ஹிஸ்புல்லா தரப்பிலும் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில் ஈரான் அண்மையில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தயது.இதற்கு பதில் தாக்குலை ஈரானின் எண்ணெய் கிடங்கின் மீது நடத்தும் என தகவல் வெளியாகியிருந்தது.
இதனிடைய நேற்று முன்தினம் இந்த போரை அரசியல் ரீதியில் நிறுத்த பிரான்ஸ் முயன்றுள்ளது. இதன் ஒரு கட்டமாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளது.மேலும் மற்ற நாடுகளையும் ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.இதனிடையே இன்றைய தினம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.