காஸாவிற்கான மனிதபிமான உதவிகள் வழங்கா விடத்து இராணுவ உதவிகள் நிறுத்தப்படும். -அமெரிக்கா
இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் இராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் அரச செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவிக்கையில் ” இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் எந்தோணி பிளிங்டன் கடந்த ஞாயிற்று கிழமை எழுதிய கடிதத்தில் ,காஸாவின் நிலையில் விரைவான மாற்றத்தை காண வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும்
கஸாவில் மனிதபிமான முறையில் உதவிகள் வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை.நாங்கள் விரைவான மாற்றத்தைககாண விரும்புகிறோம்.ஒரு மாதத்திற்குள் காஸாவில் மனிதபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுவரும் உதவிகள் நிறுத்தப்படும் நிலை உருவாகலாம் என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல பாலஸ்தீன போரானது கடந்த ஆண்டு முதல் நடைப்பெற்று வருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் காயங்களுக்குள்ளாயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.