55 இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரிழப்பு..!
ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இதுவரை நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக எட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதே வேளை 20 பீரங்கிகள்,4 இராணுவ புல்டோசர்கள் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை லெபனான் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையில் நடந்த போரில் இரு நாட்டு எல்லைகளுக்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீன போரானது கடந்த ஆண்டு முதல் நடந்து வருகின்றது. இந்த போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இராணுவத்தினர் லெபனான் எல்லையிலிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.