அகில இலங்கை தமிழ் தினப் போட்டிகளில் பிரகாசித்த ஹாட்லி மாணவர்கள்
தேசிய ரீதியில் இடம்பெற்ற தமிழ் தினப் போட்டிகளில், இந்த வருடம் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவர்கள் பல வெற்றிகளை எடுத்து சாதனை படைத்துள்ளனர். மாகாண நிலையில் வெற்றிகளை எடுத்து தேசிய ரீதியில் பங்குபற்றிய ஹாட்லி மாணவர்களிலிருந்து இந்த தடவை மூன்று முதல் இடங்களும், மேலும் ஒரு மாணவருக்கு இரண்டாம் இடமும் கிடைத்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒன்பது மாகாண மடடங்களிலும் வெற்றிபெற்ற மாணவர்கள், கடந்த வாரங்களில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பல்வேறு பிரிவுகளிலும் ,வெவ்வேறு வகையான போட்டிகளில் பங்குபற்றி தங்கள் திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
அந்த வகையில் ஹாட்லியில் இருந்து வழமையாக, அகில இலங்கை ரீதியாக மிகைத்திறனை வெளிப்படுத்தும் குழு இசைப்போட்டியில், இந்த வருடம் குழு இசை பிரிவு இரண்டில் முதல் இடம் பெற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அதேபோல பிரிவு மூன்று தனி இசைப்போட்டியில் வாணிமுந்தன் மோசிகீரன் முதல் இடத்தையும், பிரிவு நான்கு தனியிசைப் போட்டியில் திருமாறன் ஹரிபிரசாத் முதல் இடத்தையும் தக்கவைத்து பெருமை சேர்த்துள்ளனர்.
இதைவிட பிரிவு ஐந்தில் பேச்சுப் போட்டியில் இரண்டாமிடத்தை சிவகணேசன் அனந்திகன் பெற்று சாதனைப்படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.