ரஷ்ய வடகொரிய கூட்டணியால் ஆபத்து- ஜெலன்ஸ்கி.
ரஷ்யா வடகொரியா ஆகிய நாடுகளின் கூட்டணிக்கு சில நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.இதற்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வினியோகிக்கப்படுகின்றன.இதன் காரணமாக போர் நீண்டு செல்லும் .மேலும் இதனை ரஷ்யா எப்படி மீள செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை வடகொரியாவானது ரஷ்யாவின் இராணுவ அதிகாரிகளையும் அனுப்பியுள்ளது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு நட்பு நாடுகள் வெளிப்படையான பதிலை தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு சான்றாக ரஷ்யாவில் இருந்து வெளிவரும் காணொளிகள் மூலமாகவும்,செயற்கைகோள்கள் மூலமாகவும் காணலாம் என தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக போர் நீளுமே தவிர முடிவுக்கு வராது என தெரிவித்துள்ளார்.விரைவில் போர் முடிவுக்கு வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
2வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்யா யுத்தமானது இடமபெற்று வருகிறது.இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.மேலும் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடிகளும் எற்பட்டுள்ளன.