இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் உக்ரைன் ரஷ்ய போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி..!
ரஷ்ய உக்ரைன் போரை நிறுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முடியும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கருத்து தெரிவிக்கும் போது”உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் .அதிக மக்கள் தொகை கொண்ட நாடு,5வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புக்களை இந்தியா பெற்றிருக்கிறது.சர்வதேச அரசியலில் அந்த நாடு ஆதிக்கம் செலுத்திவருகிறது.இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்குகிறார்.உக்ரைன் ரஷ்ய போரை நிறுத்த அவரால் உதவ முடியும்.இது தொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்பிருக்கிறது.” என்று தெரிவித்தார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையப்போவதாக தெரிவித்த நிலையில் ரஷ்யாவானது உக்ரைன் மீது போரை அறிவித்தது.இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக இந்த போரானது நடைப்பெற்று வருகிறது.